தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
குடிபோதையில் தகராறு; தந்தையை கத்தியால் அறுத்துக்கொன்ற மகன்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை, மாசிலா மணி தெருவில் வசித்து வருபவர் தேவராஜ் (வயது 63). இவரின் மகன் சரத்குமார் (வயது 27). சென்னையில் செயல்பட்டு வரும் உணவகத்தில் சமையலராக வேலை பார்க்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுப்பு எடுத்து சொந்த ஊர் வந்தவர், மதுபானம் அருந்திவிட்டு வந்து தாய்-தந்தையிடம் வாதம் செய்துள்ளார். ஆகஸ்ட் 25ம் தேதி வழக்கம்போல மதுபானம் அருந்திவிட்டு பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது சரத் குமார் - தேவராஜ் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படவே, கைகலப்பில் முடிந்தது. இதில், தேவராஜ் தனது மகன் சரத் குமாரை, கையில் கிடைத்த பொருட்களால் தாக்கி இருக்கிறார். ஆத்திரமாந்த சரத்குமார், கத்தியை எடுத்து தேவராஜின் கால், கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றார்.
படுகாயமடைந்த தேவராஜ் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழ, இதனைக்கண்டு அதிர்ந்துபோன தேவராஜின் மனைவி அமராவதி, மகள் சரண்யா ஆகியோர் தேவராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
அங்கு தேவராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல் துறையினர், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.