தாய்-தந்தையை இழந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவிகள்.. விழுப்புரத்தில் சோகம்.!



in Viluppuram 12th Exam 2025 

 

தமிழ்நாடு மாநில பள்ளி வாரியத்தின் கீழ் படிக்கும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில அளவில் மாணவ - மாணவியர்கள் தமிழ் தேர்வை 03 மார்ச் 2025 (நேற்று) எதிர்கொண்டனர். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தேர்வு மையத்தில், தாய்-தந்தையை இழந்த வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினர் .

இதையும் படிங்க: மாரடைப்பால் உயிரிழந்த தாய்; துக்கத்திலும் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்.!

பொதுத்தேர்வு எழுதினார்கள்

விழுப்புரத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்த நிலையில், அவரின் மகள் ரித்திகா, விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதினார் 

இதேபோல, முகையூர் பள்ளியில் பயின்று வந்த மாணவி மகிமை ஆசானின் தாய் அலமேரி, பிப்.26 அன்று உயிரிழந்தார். விழுப்புரம் மாணவி நூர்ஜஹானின் தந்தை ஜான் பாஷா பிப்.27 அன்று உயிரிழந்தார். இவர்கள் குடும்பத்தினரை இழந்த வருத்தத்தில் தேர்வை எழுதி இருந்தனர்.
 

இதையும் படிங்க: #Breaking: தாம்பரத்திற்கு தென்மாவட்ட பேருந்துகள் இனி செல்லாது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!