#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு.. தகவல் கொடுத்ததாக அப்பாவி கொலை.. வத்திராயிருப்பு அருகே பயங்கரம்.!
ஆற்று ஓடையில் மணல் அள்ளியதால் அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்த நிலையில், தகவல் கொடுத்ததாக அப்பாவி வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, அர்ச்சுனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர், சம்பவத்தன்று கான்சாபுரம் பெரிய ஓடையில் சாக்கு மூட்டை உதவியுடன் மணல் அள்ளி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வத்திராயிருப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, காவல் துறையினர் முருகனின் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரின் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மணல் எடுத்து சென்ற தகவலை மாரியப்பன் தான் காவல் துறையினருக்கு தெரிவித்து இருக்க வேண்டும் என முருகன் சந்தேகித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாரியப்பனை கொலை செய்யவும் முருகன் திட்டமிட்டுள்ளார். நேற்று மாலை நேரத்தில் மாரியப்பன் அர்ச்சுனாபுரம் பழைய பள்ளிக்கூடம் அருகே மருமகன் சிங்கராஜ் (வயது 26) என்பவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வருகை தந்த முருகன், காவல்துறைக்கு தகவல் தெரிவித்து நீதானே என பிரச்சனை செய்துள்ளார்.
மாரியப்பன் காவல் துறையினருக்கு நான் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறவே, அதனை ஏற்க மறுத்த முருகன் மாரியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். மாமாவை காப்பாற்ற முயன்ற சிங்கராஜுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட முருகன் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக சிங்கராஜ் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.