#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாறுமாறாக ஓடிய லாரி.. சாலையோரத்தில் பாய்ந்த பரபரப்பு சம்பவம்..!
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் இருந்த வீட்டிற்குள் பாய்ந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழம்பாக்கம் அருகாமையில் நேத்தாம்பக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆசீர்வாதம். இவரது மகன் வேளாங்கண்ணி (வயது 37). இவர் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி மாலை பிரம்மதேசத்திலிருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு மரக்காணம் வழியே சென்றுள்ளார். அப்போது ஆலங்குப்பம் அருகாமையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.
இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி, சாலையோரத்தில் இருந்த வீட்டிற்குள் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேளாங்கண்ணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
அத்துடன் வீட்டின் முன்பக்கத்தில் லாரி பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.