மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன கொடுமை இது! சக மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்.. பரபரப்பு சம்பவம்..!
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்த நிலையில் ஹோட்டலில் வேலை செய்து தனது 2 மகள்களையும் வளர்த்து வந்துள்ளார். இவரது 17 வயதான இரண்டாவது மகள் நேற்று காலை தனது தாயிடம் கடுமையாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அந்த சிறுமியை மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவன் அந்த சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.