கோமாவில் இருந்த மகன்! திடீரென இரவில் கேட்ட பயங்கரசத்தம்! கட்டிப்பிடித்தபடி குடும்பத்தினர் எடுத்த விபரீத முடிவு!



whole-family-commit-suicide-for-son-dead

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே நாவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகவுரி. இவரது கணவர் முருகேசன் இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் விஜயகவுரி துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றார். இவருக்கு இருமகள்கள் மற்றும் விஜயகுமார் என்ற 27 வயது மகன் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு விஜயகுமார் சாலை விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில் கடந்த 8 மாதமாக கோமாவில் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து படுத்த படுக்கையாக இருந்த அவரை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். 

Cyclinder

 இந்தநிலையில் நேற்று மாலை விஜயகுமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து விஜயகவுரி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார். பின்னர் அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயகுமாரை பரிசோதித்து, அவர் இறந்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு விஜயகவுரி வீட்டில் திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிசென்று பார்த்தபோது வீடு இடிந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டின் உள்ளே 4 பேரும் கட்டிப்பிடித்தபடி உடல்கருகி கிடந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் அவர்கள் நான்கு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையில், மகன் இறந்த துக்கத்தால் விஜயகவுரியும் அவரது மகள்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு சிலிண்டரை வெடிக்கச்செய்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.