திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இதற்கெல்லாமா தற்கொலை செய்து கொள்வீர்கள்..? தந்தை கண்டித்ததால் +1 மாணவி தற்கொலை..!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மடிமைகண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவருக்கு லோகேஸ்வரி என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பொன்னேரி அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் லோகேஸ்வரி அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடுவதில் நேரத்தை செலவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவரது தந்தை ராமகிருஷ்ணன் செல்போனில் நேரத்தை செலவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்துள்ளார்.
இதனைதொடர்ந்து தந்தை தன்னை கண்டித்ததால் மனம் உடைந்த லோகேஸ்வரி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இவ்வாறு லோகேஸ்வரி மயங்கி விழுவதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு லோகேஸ்வரி அனுப்பப்பட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த லோகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.