#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சோகத்தில் தமிழகம்... 3 குழந்தைகளுடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் கோட்டையூரில் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது கணவர் சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் புறத்திலும் மன அழுத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது.
தனது கணவரின் பிரிவை தாங்க முடியாத அந்த பெண் அவர் இறந்து மூன்று நாட்களுக்குப் பின் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்போவும் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியால் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும் கிணற்றிலிருந்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. கணவன் இறந்த பிரிவு தாங்காமல் தாய் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.