மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரியலூரில் மின்னல் தாக்கி பெண் பலி.. விவசாய நிலத்திற்கு சென்ற போது நேர்ந்த சோகம்..!
தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே சில இடங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்துள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழையூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் நடராஜன் - செல்வி தம்பதியினர். இவர் தனது கணவருடன் மாட்டுக்கு தீவனம் அறுப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர் தீவனத்தை அறுத்து கட்டி தனது கணவரின் இரு சக்கர வாகனத்தில் வைத்து கொண்டு செல்லுமாறு அவரை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் தன்னுடைய நிலத்தில் தீவனத்தை அறுத்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் கீழையூர் பகுதியில் மழை பெய்ததால் மழைக்கு ஒதுங்குவதற்காக பனைமரத்து அடியில் அமர்ந்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக செல்வி அமர்ந்திருந்த பனை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் செல்வியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.