"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவன்! ரஜினி ரசிகர்கள் சிறுவனின் வீட்டிற்கு சென்று செய்த காரியம்!
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
இந்த விசாரணையில் மிரட்டல் நபர் கடலூரை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் என்பது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அந்த சிறுவன்தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தனது தந்தையின் செல்போன் மூலம், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில், அந்த சிறுவன் அவனது தந்தையின் செல்போனை எடுத்து அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மாணவனுக்கு சற்று மனநலம் பாதிப்பு என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை எச்சரித்த போலீசார் அவரது பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டு சிறுவனை விடுவித்தனர்.
இந்நிலையில் சிறுவனின் தந்தை, நானும் ரஜினி ரசிகர்தான், எனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதால் ரஜினிகாந்த் இதனை மன்னிக்க வேண்டும், அவரது ரசிகர்களும் மன்னிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அவருக்கு நிவாரணம் வழங்கினர்.