எலிக்கு வைத்த வலையில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம்... பொள்ளாச்சியில் பரபரப்பு.!



Young girl eat rat paste

பொள்ளாச்சியை அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து. இவர் அப்பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மளிகை கடையில் எலி தொல்லை அதிகமானதால் அதற்கு கேரட்டில் மருந்து தடவி வைத்துள்ளார்.

இதனை அறியாத கடை உரிமையாளரின் மகள் கடையிலிருந்து கேரட்டுகளை வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த இளம் பெண் மயங்கி விழுந்துள்ளார்.

young girl

உடனே இளம்பெண்ணை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலிக்கு வைத்த வலையில் இளம்பெண் சிக்கி உயிரிழந்த சோகம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.