#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விலை உயர்ந்த பைக்கை ஓட்டிப் பார்ப்பதாக கூறி ஓட்டி சென்று உல்லாசமாக சுற்றி திரிந்த காதல் ஜோடி... பரபரப்பு சம்பவம்.!
சேலம் மாவட்டம் தாதுபாய்குட்டை பகுதியில் பைக் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அதில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி இளம் காதல் ஜோடி விலை உயர்ந்த பைக்கான ₹1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான புல்லட்டை வாங்குவதாக கூறி ஓட்டி பார்க்க வேண்டும் என கடை உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.
கடை உரிமையாளரும் அதை நம்பி புல்லட்டை ஓட்டி பார்க்க கொடுத்துள்ளார். ஆனால் புல்லட்டை ஓட்டி சென்ற காதல் ஜோடி வெகு நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் சம்பவம் குறித்து
சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பைக்குடன் மாயமான காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். புல்லட்டை திருடி சென்றது காதலன் பிரவீன் மற்றும் அவரது காதலி பிரித்தி என்பது தெரியவந்தது. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் காதல் ஜோடி கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரிந்தது.அதனையடுத்து சுமார் 75 நாட்களுக்கு பிறகு புல்லட்டுடன் மயமான காதல் ஜோடியினை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.