வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
விமானத்தில் யோகா செய்த பயணி! இறக்கி விடப்பட்ட இளைஞர்!
சென்னையில் இருந்து கொழும்பு செல்லவிருந்த விமானம் ஒன்றில் யோகா செய்த இளைஞர் ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கொழும்பு செல்லவிருந்த விமானத்தில் ஏறிய இளைஞர் குணசேனா, விமானத்தில் திடீரென யோகா செய்ய ஆரம்பித்துள்ளார். அவர் செய்த யோகா சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விமான அதிகாரிகள் கேட்டபோது, பயணி குணசேனா முன்னுக்குப்பின் முரணாக நடந்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை விமானத்தில் இருந்து இறக்கி விட்ட விமான அதிகாரிகள் அவரின் டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் குணசேனாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.