கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இந்தியாவில் ஆசிரியர் தினம் எப்போதில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது தெரியுமா? இதோ!
உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் அக்டோபர் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அதேவேளையில் ஒவொரு நாட்டிலும் ஆசிரியர் தினம் வேறு வேறு நாட்களில் தனித்தனியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவை பொறுத்தவரை ஒவொரு வருடமும் செப்டம்பர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடிவருகிறோம்.
சிறந்த ஆசிரியரும், இந்திய நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவருமான டாக்டர். ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளைத்தான் நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடிவருகிறோம். நம்மை வாழ்வில் முன்னேற செய்த ஆசிரியர்களை நினைவு கூறும் விதமாகவும், அவர்களை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது நமது அரசு.