உங்களின் மரணம் எப்போது? ஈசியாக கண்டுபிடிக்க வந்தது ஏஐ ஆப்..!



AI Death Clock App 

சர்வதேச அளவில் ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு வகைகளில் மக்களுக்கு தகவல்களை உடனுக்குடன் வழங்கி வருகிறது. படிப்பு, வேலை, எதிர்காலம் என பல்துறைகளில் ஏற்படும் சந்தேகங்களையும், தன்னிடம் இருக்கும் தகவல்களால் கருத்துக்களை பகிர்ந்து நம்மை உத்வேகப்படுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு

சமீபத்தில் ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது எதிர்காலத்தை தீர்மானிக்க மிகப்பெரிய ஆயுதமாகவும் உள்ளது. இதனிடையே, தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட மரண கடிகாரம் (Death Clock App) எனப்படும் செயலி, நமது மரண நாட்களை தேர்வு செய்வதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: கடந்த மாதங்களை விட ஸ்பேம் அழைப்புகள் தேசிய அளவில் குறைவு; டிராய் அறிவிப்பு..

Technology

மரணம் எப்போது?

மனித வாழ்க்கையில் மரணம் என்பது இயற்கை எனினும், தற்போது ஒரு சிலர் அதனை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆவலிலும் இருக்கின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சூழலில் உருவாக்கப்பட்டுள்ள ஏஐ செயலி மூலமாக உருவாக்கப்பட்ட ஆப் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 

தரவுகளின் அடிப்படையில் தகவல்

கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தியிருக்கின்றனர். 1200க்கும் மேற்பட்ட தனிப்பட்ட வாழ்நாள் விஷயங்கள் கொண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலில், மனிதர்களின் மரணத்தை நாம் கொடுக்கும் தகவலை பொறுத்து கணித்து கூறும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.1 கோடி லோனை ஒரே மாதத்தில் செலுத்திய வாடிக்கையாளர்; வாயைப்பிளந்த வங்கி மேலாளர்.. எப்படி சாத்தியம்?