"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
ரூ.1 கோடி லோனை ஒரே மாதத்தில் செலுத்திய வாடிக்கையாளர்; வாயைப்பிளந்த வங்கி மேலாளர்.. எப்படி சாத்தியம்?
இன்றளவில் வங்கிகள் தனிநபர் முதல் தனியார் நிறுவனங்கள் வரை, அவர்களுக்கு தேவையான நிதியுதவியை ஈடு செய்ய நிபந்தனை முறைகளில் கடன்களை வழங்குகிறது. ஏன் அரசு கூட தனது துறைகளை மேம்படுத்த உலக வங்கியிடம் இருந்து கடனை பெற்று, துறையை மேம்படுத்தி வருமானம் எடுத்து பின் அதனை திரும்ப செலுத்துகிறது.
அவசரத்திற்கும், தொழில் மேம்பாட்டுக்கும் வாங்கப்படும் கடன்கள் மாத தவணை வாயிலாக வசூலிக்கப்படும். ஒருமாதம் தவணை செலுத்த தவறினாலும் வங்கியின் கடன் வசூல் அதிகாரிகள் ஏழை மக்களைக் கண்டால் உருட்டி எடுத்துவிடுவார்கள். இதனால் இழக்கப்பட்ட உயிர்களும் ஏராளம். அதேநேரத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: உதயமானது "டெக் சூப்பர் ஸ்டார்" யூடியூப் சேனல் - புது ஆபிஸ் ஓபன் பண்ணியாச்சே.. இனி எல்லாம் மாஸ் தான்.!
சட்டம் ஏழைக்கும் - செல்வந்தருக்கும் வெவ்வெறு என்பதே களநிலவரம்
ஒருசில வங்கிகள் கார்ப்பரேட் பேர்வழிகளுக்கு தேடித் சென்று பல ஆயிரம் கோடிகளை கடனாக கொடுத்து, அவன் நிறுவனத்தை திவாலாக்கி தப்பிச் சென்றதும், ஏழை எளிய மக்களின் கணக்குகளுக்கு ஏடிஎம் கார்ட், மினிமம் பேலன்ஸ் என பல விதிமுறைகளை வழிவகுத்து இழந்த பணத்தை மீட்டெடுக்கும். இறுதிவரை குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்காது. சட்டப்போராட்டம் நடத்தி அவளும்-பொறியும் சாப்பிடும்.
இந்நிலையில், பேங்க் மேனேஜரிடம் ரூ.1 கோடி கடன் பெற்ற வாடிக்கையாளர், அதனை ஒரே மாதத்தில் திரும்ப செலுத்திய யுக்தி குறித்த கற்பனை உரையாடல் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த உரையாடல் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரே மாதத்தில் ரூ.1 கோடி தவணைத் தொகையை பணமாக செலுத்திய வாடிக்கையாளர், அதனை போலியாக அச்சடித்து பிரச்சனை இன்றி, தரமான தனது செயலால் பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பேங்க் மேனேஜர் அதிர்ச்சியில் உறைந்தார்.
மேனேஜர்
“என்ன சார் இது! ஒரு கோடி ரூபாய் லோனை ஒரே மாசத்துல ஒரே இன்ஸ்டால்மெண்ட்ல முழுசா ரீ பே பண்றீங்க?”
வாடிக்கையாளர்
“செய்யற தொழில்ல பிராடக்ட் குவாலிட்டி நல்லா இருந்தா இதொண்ணும் கஷ்டமே இல்லை”
மேனேஜர்
“பிரிண்டிங் பிரஸ்ஸுக்காக லோன் வாங்கினீங்க. என்னதான் குவாலிட்டின்னாலும் பிரிண்டிங்ல ஒரே மாசத்துல ஒரு கோடி ரூபாய் லோனைக் கட்ட முடியுமா?”
வாடிக்கையாளர்
“முடியும் சார், பிராடக்ட் குவாலிட்டி நல்லா இருந்தா முடியும்”
மேனேஜர்
”அப்படி என்ன பொல்லாத பிராடக்ட் குவாலிட்டி?”
வாடிக்கையாளர்
“அடுத்த மாசம் சொல்றேன்”
ஒரு மாசம் போயிற்று... மண்டை வெடித்து விடும் போலக் காத்திருந்த மேனேஜர் லோன் வாங்கியவரை சந்தித்து.,
மேனேஜர்
“இப்பவாவது சொல்லுங்களேன்” என்றார்.
வாடிக்கையாளர்
“நான் கொடுத்த பணம் பூரா சர்க்குலேஷன்ல போயிடுச்சா?”
மேனேஜர்
“ம்ம் ஆச்சு”
வாடிக்கையாளர்
“எதும் கம்ப்ளெய்ண்ட் இல்லையே?”
மேனேஜர்
“இல்லையே? ஏன்?”
வாடிக்கையாளர்
“அதான் என் பிராடக்ட் குவாலிட்டி”
மேனேஜர்
“புரியலை. இதுல எங்கேர்ந்து பிராடக்ட் குவாலிட்டி வந்தது?”
வாடிக்கையாளர்
“நான் கொடுத்தது பூரா என் பிரஸ்ஸுல அடிச்ச நோட்டு. எவ்வளவு சுப்பீரியர் குவாலிட்டியா இருந்தா இதுவரைக்கும் கம்ப்ளெய்ண்ட்டே வராம இருக்கும்?
இந்த தகவலை கேட்ட மேனேஜரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம்.
பதிவு நன்றி100% பொழுதுபோக்கு
கள்ள நோட்டுகள் அச்சடிப்பது, அதனை பரப்புவது, பரப்ப முயற்சிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குற்றமான நடவடிக்கை ஆகும். இவ்வாறான செயலில் ஈடுபட்டு தனிநபரோ, அச்சடிக்கும் நிறுவனமோ சிக்கினால் கடும் தண்டனை அல்லது அபராதத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: மோட்டோரோலா போன்கள் விற்பனை, பயன்பாடு, இறக்குமதிக்கு திடீர் தடை; ஈரான் அரசு உத்தரவு.!