விரைவில் வருகிறது அணைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் ஒரே விதமான சார்ஜ்ர்!



Instruction passed to mobile companies to manufacture same type of charging cables

உலகின் முன்னணி மொபைல் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் தாங்கள் தாயரிக்கும் ஸ்மார்ட் போன்களுக்கு வெவேறு விதமான சார்ஜிங் போர்டு மற்றும் வயர்களை தருகிறது.

உலகில் பல்வேறு மூலைகளில் பலவிதமான மின்சாதன கழிவுகள் தேங்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவுகள் தேங்குவதற்கு இதுபோன்ற சார்ஜிங் வயர்களும் ஒரு காரணமாக அமைகின்றன.

அதாவது, பயனாளிகள் புதிய சாதங்களை வாங்கும்போது பழைய ஸ்மார்ட்போன் Charger-களை வீசிவிடுகிறார்கள். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தைகளில் உற்பத்தியாகும் கைப்பேசிகளுக்கு பொதுவான Charging board-யை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் வகையில், ஐரோப்பிய கூட்டமைப்பு சில மாற்றங்களை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Smart phones

ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டில் ஆப்பிள், சாம்சங், நோக்கியா என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பொதுப்படையான கைப்பேசி Charger -களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், எந்த நிறுவனமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. எனவே தான் ஐரோப்பிய கூட்டமைப்பு தற்போது ஆய்வு ஒன்றை நடத்தி, USB மற்றும் Type-C ரக Charger-களை பொதுப்படையாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் USB மற்றும் Type-Cஐ வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, ஐபோன்களுக்கு இந்த வகை Charger-கள் தான் வழங்கப்படும்.