Pixel 7a: குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன்.!



pixel-7-a-mobile-in-india

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட Pixel 7A ரக செல்போன் சலுகை விலையில் தள்ளுபடி முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சந்தை மதிப்பில் ரூ.43,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நம்மிடம் உள்ள HDFC வங்கி பேங்க் கார்ட் மூலமாக ரூ.4000 தள்ளுபடியுடன் இந்த செல்போனை வாங்கலாம். Pixel 7A சிறந்த டிஸ்ப்ளே, கேமரா, பிரீமியம் டிசைன் போன்றவற்றை கொண்டுள்ளது. இதன் செயல் திறனும் அதிகம் என்பதால் அதற்கு ஏற்ப விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி கொண்ட IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் ரேட்டிங்கிற்கான சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. மேலும் Tensor G2 SoC சிப்செட் மற்றும் 4,300 mAh பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. இதன் ரீடைல் பாக்ஸில் சார்ஜர் இருக்காது.