ஹிந்தி திணிப்பை உறுதி செய்தால் ரூ.99 இலட்சம் பரிசு.. திருப்பூர் பாஜக அறிவிப்பு.!



Tiruppur BJP Announce Rs 99 Lakh Reward 

 

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள கல்விக்கொள்கை தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசு, திமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: பிரவசத்துக்கு அவசர சிகிச்சை கிடைக்காமல் பெண் பலி? அண்ணாமலை குற்றச்சாட்டு.. திமுக அரசுக்கு கண்டனம்.!

மத்திய அரசுக்கு எதிராக திமுகவினரும், திமுக அரசுக்கு எதிராக பாஜகவும் தங்களின் கருத்துக்களை கல்விக்கொள்கை தொடர்பாக முன்வைத்து வருகின்றனர். மேலும், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், கல்வி நிதியும் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள மும்மொழி கல்விக்கொள்கையில், ஹிந்தி திணிப்பு தொடர்பான தகவலை கண்டறிந்தால், ரூ.99 இலட்சம் பரிசு வழங்கப்படும் என திருப்பூர் பாஜக சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

bjp

தமிழ்நாடு பாஜக மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக வீடு-வீடாக கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறது. இதனிடையே, திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் கார்த்திக், ஆன்மீக பிரிவு துணை தலைவர் சிவா ஆகியோர் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில், மும்மொழியில் முதல் மொழி தமிழ் கட்டாயம், இரண்டாம் மொழி ஆங்கிலம், மூன்றாம் மொழி மாணவர்களின் விருப்ப மொழியே. திமுக புள்ளிகள் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கல்வி ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதுவே புதிய கல்விக்கொள்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மத்திய அமைச்சரை வரவேற்று நடிகரின் போஸ்டர்; காரணம் என்ன? பாஜக தரப்பு விளக்கம்.!