#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உதவிக்கரம் நீட்டிய அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்த ஆப்கானிய அகதி... அமெரிக்காவில் பயங்கரம்.!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தன்னால் இயன்றளவு ஆப்கானிய மக்களை அகதிகளாக தனது நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அழைத்து சென்றது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸினில் பகுதியில் ஆப்கானிய அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது.
இந்த அகதிகள் முகாமில் ஆப்கானிய சென்னட்டின் முன்னாள் ஆலோசகர் மதியுள்ளா மேட்டி (வயது 40) என்பவர், அமெரிக்க அதிகாரிகளுக்கு தொடர்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அங்குள்ள மக்களின் நிலை மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றை கூறவும், மொழி பெயர்ப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இவருடன், அமெரிக்க நாட்டில் உள்ள தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்த பெண்மணியும் ஆப்கானியர்களுக்கு உதவி செய்து வந்த நிலையில், மேட்டி அமெரிக்க பெண்ணை காரில் வைத்து வலுக்கட்டாயமாக கற்பழித்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் மேட்டியை கைது செய்தனர்.