79 வயது பெண்ணின் சடலத்துடன் உடலுறவு மேற்கொண்ட மருத்துவமனை பணியாளர்: செக்யூரிட்டி பண்ற வேலையா இது?.!



America Arizona Security Rape 79 Aged women Corpses 

 

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் Randall Bird. இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

கடந்த அக்டோபர் மாதம் பேர்ட், 79 வயது பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் உடலில் அவர் காயங்களையும் ஏற்படுத்தி இருக்கிறார். 

குளிர்பதன பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த பெண்ணின் சடலத்தை வெளியே எடுத்து பேர்ட் உடலுறவு கொண்ட நிலையில், அவருடன் வேலைபார்த்து வந்த நபர்கள் பேர்ட் பெண்ணின் சடலத்தை மீண்டும் ப்ரீஸருக்குள் எடுத்து வைக்கும்போது பார்த்துள்ளனர். 

அவரிடம் என்ன நடந்தது? என்பது குறித்து கேட்டபோது பதில் அளிக்கவில்லை. இதனால் முதல்நிலை கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணைக்கு பின்னர், பேர்ட்-ன் செயல்பாடுகள் அம்பலமாகின. வயதான பெண்ணின் சடலம் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு, மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன. 

இந்த சோதனைகளின் முடிவுகள் அனைத்தும் பேர்ட்-க்கு எதிராக அமைந்துளளது. தற்போது அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.