வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பள்ளி மாணவர்கள் குழுவில் ஆசிரியையின் ஆபாச படம்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆசிரியை பரபரப்பு பேட்டி.!
மாணவ-மாணவிகள் உள்ள குழுவில் ஆசிரியையின் அரை நிர்வாண படம் வெளியான விவகாரத்தில், ஆசிரியை தனியார் சேனலுக்கு விளக்கமளித்து பேட்டி அளித்து இருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வரும் சமந்தா பீர், ஒன்லி பேன்ஸ் என்ற சமூக பக்கத்தில் தனது கணவருடன் தனிமையில் இருக்கும் கவர்ச்சி படங்கள், விடீயோக்களை பணம் சம்பாதிக்க பதிவிட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், ஆசிரியை சமந்தா பீர் உள்ளாடை மட்டும் அணிந்தவாறு மேலாடையின்றி எடுத்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் மாணவர்களின் குழுவின் பகிரப்பட்டது. இதனால் அவரின் வேலைக்கு ஆப்பு வந்த நிலையில், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது.
இவர் எப்படியாவது தனது வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என முயற்சித்து வரும் நிலையில், அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், மாணவர்கள் தன்னை மன்னிக்க தயாராக இருந்தாலும், பெற்றோர்கள் தன்னை மன்னிக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்த அவரின் பேட்டியில், "நடந்த நிகழ்வுக்கு என்னை மாணவர்கள் மன்னித்துவிட்டார்கள். அவரில் ஒருவர் எனக்கு எழுதிய கடிதத்தில் எனக்கு அறிவியல் ஆசிரியராக வந்ததற்கு நன்றி. நான் உங்களின் வகுப்பறையில் நன்றாக படிக்கிறேன். ஒருசில நாட்கள் மனரீதியாக தொய்வு அடைந்து வந்தாலும், நீங்கள் பாடம் நடத்தும் விதம் அனைவரையும் ஊக்குவிக்கும்.
நீங்கள் என்னை இரண்டாவது தாய் போல பார்த்துக்கொள்கிறீர்கள் என்றெல்லாம் கூறியுள்ளார்கள். எனது போட்டோ மாணவர்கள் குழுவில் வந்தது எதிர்பாராமல் நடந்தது. ஆனால், அதனை ஏற்று அடுத்தகட்டத்துக்கு நாம் பயணம் செய்ய வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் பாடம் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனது கணவருக்கும் - குழுவில் வீடியோ பகிரப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை. நானும் - எனது கணவரும் வாங்கும் ஊதியம் என்பது எங்களின் குடும்ப செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. பள்ளியில் நீண்ட நேரம் பணியாற்றுவது, எனது குழந்தைகளிடம் இருந்து என்னை பிரிக்கிறது. இதனால் ஒன்லி பேன்ஸ் தொடர்பான விஷயம் தெரியவந்தது.
நானும் - எனது கணவரும் இதில் பயணிக்கிறோம். இது எனது குழந்தைகளிடம் இருந்து எங்களை பிரிக்காது.. ஏனெனில் நாங்கள் அவர்களுடன் நேரத்தை செலவழிப்போம். செல்போனிலேயே சிறிது நேரத்தில் அனைத்தும் முடிவடையும். பாலியல் கல்வி என்பது குழந்தைகளுக்கு தேவையான ஒன்று. ஆனால், பாலியல் இன்பம் என்பது இளவயதில் ஆபத்தானது" என்று கூறினார்.