#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தியர்களை வெறுக்கிறேன்., உங்க நாட்டுக்கே திரும்பி போங்க.. இந்திய பெண்ணை திட்டி சரமாரியாக தாக்கும் அமெரிக்க பெண்..!! வைரல் வீடியோ..!!
150 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். இதில் இந்தியர்கள் அதிகப்படியாக வாழும் நாடுகளில் முக்கியமான நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்குள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் 33% ஊழியர்களாக இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய பெண்மணிக்கும், அமெரிக்க பெண்மணிக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த சம்பவம் எதனால் நடந்தது? என்று தெரியவில்லை.
Four Indian women were verbally abused, physically attacked, and threatened at gunpoint by this disgusting racist woman who has been identified as Esmi Armendarez Upton.
— BrooklynDad_Defiant!☮️ (@mmpadellan) August 25, 2022
Do your thing, Twitter.
Make her infamous.pic.twitter.com/muYvoiHUYJ
ஆனால் வீடியோவில் பேசும் அமெரிக்க பெண்மணி, இந்திய பெண்மணியை பார்த்து "இந்தியர்களை நான் வெறுக்கிறேன். இந்தியர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு வருகை தருகிறார்கள். நீங்கள் இந்தியாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறுகிறார். மேலும் இந்திய பெண்மணி அவர்களை தாக்கும் சம்பவமும் காணொளியில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.