#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அமேசான் உரிமையாளர் வாழ்க்கையில் இப்படியொரு சோதனையா? வெளியான அதிரவைக்கும் அறிவிப்பு!
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸ். 54 வயது நிறைந்த பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் ஆகும்.
இவருடைய மனைவி மெக்கென்சி . நாவலாசிரியரான இவருக்கும், ஜெப் பெசோஸக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.மேலும்,பெண் குழந்தை இல்லாத நிலையில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இவர், ஆவார்.
இந்த நிலையில், ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தகவலை அவர்கள் இருவரும் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
மேலும், நாங்கள் தனித்தனியாக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் எப்பொழுதும் ஒரே குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் சிறந்த பெற்றோர்களாக, நண்பர்களாக சேர்ந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளனர்.