அதிர்ச்சி...ஏரியில் சடலமாக மிகுந்த ஒபாமாவின் சமையல்காரர்... இறந்தது எப்படி.?



barrack-obama-cook-died-in-a-boat-accident-obama-extend

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின்  பிரத்தியேக சமையல் கலைஞர்  ஒபாமா வீட்டின் அருகே உள்ள ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரிய வந்திருக்கிறது.

அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை  அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்தவர். அப்போது வெள்ளை மாளிகையில் தலைமை சமையல் கலைஞராக இருந்தவர் டஃபாரி கேம்ப்பெல் (வயது 45). 

Americaஇவரது சமையல் ஒபாமாவிற்கு மிகவும் பிடித்துப் போகவே தனது பதவிக்காலம் முடிந்து மார்தாஸ் வைன்யார்ட் எனும் தீவில் ஏழாயிரம் சதுர அடி கொண்ட பிரம்மாண்டமான பங்களாவில் குடியேறியதும்  தனது சமையல் பணியாளர்களின் குழுவில் அவரையும் இணைத்துக் கொண்டார்.

Americaஇந்நிலையில் டஃபாரி கேம்ப்பெல் ஒபாமா  பங்களாவின் அருகில் உள்ள கிரேட் பாண்ட்  என்னும் நீர் நிலையில் பேடல்  போட்டில் பயணம் செய்தார் அப்போது எதிர்பாராத விதமாக படகு நீரில் மூழ்கியதில்  கேம்பல் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சோனார்  தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏரியிலிருந்து 100 அடி தூரத்தில் மீட்கப்பட்டது . மேலும் இந்த சம்பவம் நடைபெறும் போது ஒபாமா மற்றும் அவரது மனைவி வீட்டில் இல்லை. இருவரும் சமையல் கலைஞரின் இறப்பிற்கு  அஞ்சலி தெரிவித்துள்ளனர்.