#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாலத்தில் தறிகெட்டு இயங்கி தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து; 16 பேர் பரிதாப பலி., 25 பேர் படுகாயம்.!
மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டில், இன்று பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இன்று காலை 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்த பேருந்து, அங்குள்ள Rancho Grande பகுதியில் சென்றுகொண்டு இருந்தது.
அங்குள்ள மான்செரா ஆற்றுப்பாலத்தில் பேருந்து பயணம் செய்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் குழந்தைகள் ஆவார்கள். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.