3 குழந்தைகள் பெத்துக்கோங்க.. சலுகைகளை அள்ளிட்டு போங்க..! சீனா அதிரடி.!!



China Govt Announce Discount for 3 Baby Children Parents

உலகளவில் அதிக மக்கள் தொகைக்கொண்ட நாடாக சீனா இருக்கிறது. இங்கு, அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைய தொடங்கியது. ஒரு தம்பதி ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி இருந்ததால், பல குழந்தைகள் இரண்டாவது பிறப்பின் போது கழிவறையில் இட்டு கொலையும் செய்யப்பட்டது. 

china

இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. குழந்தைகள் பிறப்பு விகிதத்தை சீன அரசு உயர்த்த வேண்டும் என தொடக்கத்தில் பல நாடுகள் கூறியும் சீனா அதனை கண்டுகொள்ளவில்லை. தற்போது, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைய தொடங்கியதன் எதிரொலியாக, 2 குழந்தைகளுக்கு மேல் தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாது என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. 

china

இனி சீனாவில் உள்ள தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளை ஊக்குவிக்க, மானியங்கள் மற்றும் வரிக்குறைப்பு தொடர்பான அறிவிப்பை மாகாண அரசுகள் அறிவித்து வருகிறது. 

பீஜிங், சிசுவான், ஜியாங்சி உட்பட 20 க்கும் மேற்பட்ட மாகாணத்தில் மகப்பேறு விடுமுறை, திருமண விடுமுறை நீட்டிப்பு, தந்தைவழி விடுப்பு அதிகரிப்பு போன்ற சலுகைகள் தம்பதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.