நாய் இறைச்சி விற்பனைக்கு தடை.. போராட்டத்தில் குதித்த மக்கள்.. எங்கு தெரியுமா?



Dog meat ban in South korea

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிலும் பல்வேறு வகையான உணவு பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் கொரியாவில் நாய் இறைச்சி அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். 

Dog meat

இதனிடையே விலங்குகள் நல ஆர்வலர்கள் நாய்க்கறிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதனையடுத்து பல்வேறு கட்ட பரிசீலனைகள் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்கொரியா நாட்டில் செப்டம்பர் மாதம் நாய் கறிக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் நாய் கறிக்கு தடை விதிக்க முடிவு செய்தவர்களாகவும் தகவல் வெளியாகியது.

Dog meat

இந்த நிலையில் அந்நாட்டின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் நாய் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் நாய் இறைச்சி சாப்பிடுபவர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர்.