#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தினமும் 2 கிமீ நடந்து சென்று தனது உரிமையாளருக்காக நாய் செய்யும் காரியம்.! ஆச்சர்யமூட்டும் வீடியோ.!
சமீபகாலமாக இணையத்தில் பறவைகள், விலங்குகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அவற்றில் சில அதிர்ச்சியூட்டும் வகையிலும், ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கும். பொதுவாக நாய் நன்றியுள்ளது என கூறுவர். அதுமட்டுமின்றி அது மனிதர்களைப் போலவே அதிக உணர்வுகளையும் கொண்டுள்ளது.
நாய்கள் மனிதர்களுடன் நண்பர்களாக பழகி வருகிறது. மேலும் தங்களது உரிமையாளர்கள் மீது மிகுந்த அன்பும், விசுவாசமும் கொண்டு திகழ்கிறது. இந்த நிலையில் தற்போது அதனை சார்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஷெரு என்ற நாய் ஒன்று தினமும் 2 கிலோ மீட்டர் நடந்து தனது உரிமையாளரின் அலுவலகத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது.அ
மேலும் அந்த வீடியோவில் நாய் சாப்பாட்டு பாக்ஸை தனது வாயில் கவ்விக் கொண்டு செல்கிறது. மேலும் சாலையில் மிகவும் பாதுகாப்பாக வாகனங்கள் வரும்போது ஒதுங்கி சமத்தாக நடந்து செல்லும் அந்த நாயின் வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.