#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலிக்கு பரிசு கொடுத்த காதலன்.. நகை பெட்டியை திறந்து பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..
மனைவியின் நிச்சயதார்த்த மோதிரத்தை திருடி கணவன் தனது கள்ளகாதலிக்கு காதலர் தின பரிசு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளோரிடா மகாணத்தை சேர்ந்தவர் 48 வயதான ஜோசப் டேவிஸ். இவர் தனது மனைவியின் நிச்சயதார்த்த மோதிரம், திருமண பேன்ட் ஆகியவற்றை திருடி, அதனை தனது கள்ளகாதலிக்கு காதலர் தின பரிசாக கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது கள்ளக்காதலன் பரிசாக கொடுத்த மோதிரத்தை ஜோசபின் காதலி புகைப்படம் எடுத்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை எதேச்சையாக பார்த்த ஜோசபின் மனைவி, இது தனது மோதிரம் மாதிரி உள்ளதே என்ற சந்தேகத்தில், தனது நகை பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போதுதான் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது நிச்சயதார்த்த மோதிரம், திருமண பேன்ட் மற்றும் தனது பாட்டியுடைய வைர மோதிரம், நகைகள் உள்ளிட்ட சுமார் 6,270 டாலர் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து ஜோசபின் மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது அடுத்து, போலீசார் தற்போது ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.