மும்பை, காஷ்மீர் தாக்குதலுக்கு மூளை: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை.! 



Lashkar-e-Taiba terrorist Abu Qatal shot dead in Pakistan 

 

இந்தியாவில் பயங்கரவாத செயலை மேற்கொண்ட நபர் பாகிஸ்தானில் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்து இந்தியாவில் பாக்கிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு தாக்குதலை முன்னெடுத்து இருக்கின்றன. இதனால் பறிபோன உயிர்கள் ஏராளம்.இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி அபு கட்டால், பாகிஸ்தானில் என்கவுண்டரில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: ஹமாஸ் குழுவுக்கு ஆதரவு; அமெரிக்காவில் உயர்கல்வி வாய்ப்பை இழந்து வெளியேறிய இந்திய மாணவி.!

World news

பயங்கரவாதி சுட்டுக்கொலை

இந்தியாவால் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய நிர்வாகியான அபு கட்டால் என்ற பைசல் நதீம், நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2008ல் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல், 2023ல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நடத்த தாக்குதல் ஆகியவற்றுக்கும், பைசலுக்கும் தொடர்பு இருப்பது என்ஐஏ பதிவுகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் இருந்துகொண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்காக ஆட்கள் சேர்த்தல், ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மை சமூகம், பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதல் போன்றவற்றிலும் இவர் மூளையாக இருந்துள்ளார். 

இதையும் படிங்க: நாங்கள் அமைதியை விம்புகிறோம் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.. அமைதி பேச்சுவார்த்தைக்கு பச்சைக்கொடி.!