போட்டி போட்டு கண்டனம் தெரிவிக்கும் மோடி, ராகுல்! உயிர்பலியின் எண்ணிக்கை அதிகரிப்பு!



Modi and ragul tweet about bomb blast

 

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. 


இந்தநிலையில், இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பலா் உயிாிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 180 க்கு மேலானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது காட்டுமிராண்டித்தனம். இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர இந்தியா, இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவர இறைவனிடம் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். 


அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.