#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பகீர்... 2 வயது மகனால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி தாய்.!
அமெரிக்காவைச் சார்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது இரண்டு வயது மகனால் சுட போட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் ஓஹோயோ மாகாணத்தைச் சார்ந்த லாரா என்ற 31 வயது பெண்மணி காவல்துறையின் அவசர அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு தான் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்த அவரது வீட்டிற்கு சென்ற காவல் துறையை ரத்த வெள்ளத்தில் இருந்த லாராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக லாரா தனக்கு நடந்தது பற்றி காவல்துறையிடம் விரிவாக தெரிவித்துள்ளார். அவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்று இருந்த போது லாரா வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போதே படுக்கையறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து அவரது மகள் இரண்டு வயது மகன் தெரியாமல் ட்ரிக்கரை அழுத்தியதில் குண்டு லாராவின் முதுகில் பாய்ந்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து லாராவிற்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றிலிருந்த குழந்தையை காப்பாற்ற முயற்சித்தனர் ஆனாலும் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது. மேலும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர்களது வீட்டில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தினார். அப்போது எல்லா பாதுகாப்பு வசதிகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இருந்தும் அவரது இரண்டு வயது மகனால் எப்படி துப்பாக்கியின் ட்ரிகரை இழுக்க முடிந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.