"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
அர்ஜென்டினாவை தாக்கிய அசுரப்புயல்: 13 பேர் பரிதாப பலி.!
தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டில் உள்ள பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை இன்று எலக்ட்ரிக் புயல் தாக்கியது.
இந்த புயலின் காரணமாக, அங்குள்ள நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், காற்று 95 கி.மீ வேகத்திலும் வீசி இருக்கிறது.
பல இடங்களில் தொடர் கனமழையும் ஏற்பட்டதைத்தொடர்ந்து வெள்ளத்தின் பிடியில் மக்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், இந்த புயலின் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளாதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் மேயர் Bahia Blanca இத்தகவலை உறுதி செய்துள்ளார்.