"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
வெட்டவெளியில் திடீரென உருவான 650 அடி ஆழ வட்ட கிணறு.. வடிவேலு காமெடியில் காணாமல் போன கிணறு இதுவா இருக்குமோ..!
தென் அமெரிக்கா கண்டத்தின் சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள காப்பர் தொழிற்சாலை ஒன்றின் அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென ஒரு கிணறு போன்ற பள்ளம் உருவாகியுள்ளது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
82 அடி விட்ட அளவு கொண்டுள்ள அந்த பள்ளமானது சுமார் 650 அடி ஆழம் ஆக இருக்கக் கூடுமென அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பள்ளத்திற்குள் எந்த விதமான பொருட்களும் தென்படவில்லை என்றும் அதிகப்படியான தண்ணீர் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திடீர் பள்ளத்தால் அருகில் இருக்கும் காப்பர் தொழிற்சாலைக்கோ அல்லது அதனை சுற்றி வசிக்கும் மக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பள்ளம் உருவாக காரணம் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டிருக்கும் அந்த பள்ளத்தின் புகைப்படத்தை பார்க்கும் பொழுது தமிழ் சினிமா ஒன்றில் வடிவேலு தனது வட்ட கிணற்றை காணவில்லை என போலீசாரிடம் புகார் செய்யும் காமெடி தான் நினைவிற்கு வருகிறது.
Huge sinkhole of 25 meters in diameter, appears in an area of Tierra Amarilla, #Atacama, #Chile. (01.08.2022). pic.twitter.com/EbM7RBn5yd
— The informant (@theinformantofc) August 2, 2022