#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீனாவில் முதன் முதலில் கொரோனாவை பரப்பியது இந்த பெண்தான்..! புகைப்பட்டதை வெளியிட்டு அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா.!
அமெரிக்க ராணுவ ரிசர்வ் படையின் பெண் வீரர் ஒருவரே சீனாவில் கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியதாக சீனா ஊடகங்கள் அந்த பெண்ணின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுவருகிறது.
சீனாதான் கொடிய கொரோனா வைரஸை பரப்பியதாக பல்வேறு ஆராய்ச்சியாளர்களும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அமெரிக்காதான் திட்டமிட்டு கொரோனாவை சீனாவில் பரப்பியதாக அந்நாட்டு அதிகாரிங்கள் கூறிவருகின்றனர்.
குறிப்பாக, உகானில் கடந்த அக்டோபர் மாதம் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட பிறகே அங்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், அமெரிக்கா சார்பில் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட பெனாஸி என்ற பெண்தான் இந்த கொரோனாவை சீனாவில் பரப்பியதாகவும் சீனா கூறுகிறது.
ஆனால் குறிப்பிட்ட பெண் அந்த போட்டியின் கடைசி கட்டத்தில் விபத்துக்குள்ளாகி போட்டியில் இருந்து விலக நேர்ந்துள்ளது. அந்த விபத்தில் அவருக்கு விலா எலும்பு உடைந்து கொஞ்சம் ஆபத்தான நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். தற்போது பெனாஸியின் புகைப்படங்கள் அவர்தான் கொரோனாவை சீனாவில் பரப்பியவர் என சீனா ஊடகங்கள் பரப்பி வருவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெனாஸி கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை நடத்தப்பட்ட கொரோனா சோதனைகளில் தமக்கு பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.