பெற்றோர்கள் வேண்டாம் என ஒதுக்கிய தமிழ் பெண்ணிற்கு ஜப்பானில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!



vendam-chinna gave a big achivement

ஒரு பெண் குழந்தையாவது பெற்றுவிடவேண்டும் என்று பல பெற்றோர்களுக்கு ஆசையிருக்கும். ஆனால் அதே சமயத்தில் ஒரு பெண் குழந்தைக்கு மேல் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களது மனதில் ஒருவித பயமும், வேதனையும் உண்டாக துவங்கிவிடுகிறது.

அதேபோலத்தான் திருத்தணி  நாராயணபுர கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து உள்ளது.ஆனால் நாராயணபுர கிராமத்தில் ஒரு வழக்கம் இருக்கின்றது,என்னவெனில் ஒரு பெண் குழந்தைக்கு மேல் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால் அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என ஒரு நம்பிக்கை இருக்கிறது.

vendam

அதுபோல் அசோகன் எனும் நபருக்கு தொடர்ந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறக்க, இரண்டாவது குழந்தைக்கு வேண்டாம் என பெயர் சூட்டியுள்ளார்.இந்நிலையில் வேண்டாம் என்ற பெண் சக மாணவர்களின் கிண்டலுக்கு மத்தியிலும் கடுமையாக பொறியியல் படிப்பை படித்து வந்தார். வேண்டாம் என்ற அந்த பெண் கல்லூரியில் நடந்த பல்கலைக்கழக நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டார் .அப்போது ஒரு ஜப்பான் நிறுவனம் எங்களுக்கு இந்த பெண் தான் வேண்டும் வருடத்திற்க்கு 22 லச்சம் சம்பளத்திற்கு வேலை கொடுத்துள்ளது.