#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காமத்தின் உச்சம்! பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை; வெளியான அதிர்ச்சித் தகவல்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமாக்கிய கொடூர தந்தையால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனது மனைவி ஜோதி மற்றும் 14 வயது நிரம்பிய தனது மகளுடன் வசித்து வருகிறார். பாலமுருகன் அங்கு ஒரு தனியார் கம்பெனி நடத்தும் பஞ்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவருடைய மனைவி வெளியூர் சென்றிருந்தார்.
இந்தநிலையில் மதுப்பழக்கம் உடைய பாலமுருகன் மது அருந்திவிட்டு போதையில் நாள்தோறும் தனது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
வெளியூரில் இருந்து திரும்பிய ஜோதி தனது மகள் ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது கணவர் மீது ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
உடனடியாக சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பாலமுருகனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.