#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருநங்கைகள் பைத்தியமா.? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.! கொந்தளிக்கும் LGBTQ சமூகம்.!
கடந்த நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். தொடர்ந்து, அவர் இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ள நிலையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அவரது இந்த முடிவுகள் அவருக்கு வாக்களித்தவர்களையே ஏனடா வாக்களித்தோம் என்று நினைக்க வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
LGBTQ பைத்தியக்காரத்தனமா.?
அந்த வகையில், பீனிக்ஸ் நகரில் நடந்த இளம் பழமைவாதிகளுக்கான குடியரசு கட்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் பேசியபோது, "நான் பதவியேற்ற உடன் முதலில் திருநங்கைகள் என்று கூறப்படும் பைத்தியக்காரத்தனத்தை தான் நிறுத்துவேன்.
இதையும் படிங்க: பக்கத்து சிறை பெண்ணை, தொடாமலேயே கர்ப்பமாக்கிய இளைஞர்.! பதறிப்போன நிர்வாகிகள்.! என்ன நடந்தது.?!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்கவும், திருநங்கைகளாக இருப்பவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேறவும், தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து அவர்களை வெளியேற்றவும் உத்தரவுகளை பிறப்பிப்பேன்." என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
மூன்றாம் பாலினமே இல்லை
மேலும், "பெண்களின் விளையாட்டுகளில் இருந்து ஆண்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டும்தான் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை. மூன்றாம் பாலினத்தவராக ஒருவர் இருக்கவே முடியாது." என்று உறுதியாக கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு LGBTQ சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது அமெரிக்க நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கல் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: திடீரென தோன்றிய பறக்கும் வெளிச்சம்.. ஏலியன் விமானமா..?! மக்கள் அதிர்ச்சி.!