#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரட்டை குழந்தைகளை விற்க தாயும் உடந்தையா? விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.
குடும்பத்தின் வறுமை காரணமாக தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே ரூபாய் 1.8 லட்சத்திற்கு விற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் அடுத்த கைகட்டாவில் பிரம்மா மற்றும் ராமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது குடும்பத்தின் வறுமை காரணமாக இருவரும் சேர்ந்து சமையல் உதவியாளர் பணிக்கு சென்று வந்துள்ளார்கள்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த ராமா, தாகூர்நகர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தகவலறிந்த அதே ஊரைச் சேர்ந்த இரண்டு தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வேண்டும் என்று அவர்களை அணுகி உள்ளார்கள்.
இதனால் பலமுறை ஆழ்ந்து யோசித்த அந்த தம்பதியினர் முடிவில் குடும்பத்தின் வறுமை காரணமாக 1.8 லட்சத்திற்கு அந்த குழந்தைகளை விற்க முடிவு செய்தனர்.
இதன் படி, அப்பகுதியில் அரிசி வியாபாரம் செய்த வியாபாரி கிருஷ்ணகந்தா தாஸிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு குழந்தையையும், மற்றொரு குழந்தையை ராம்சந்திராபூரைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியருக்கு 80 ஆயிரத்துக்கும் வித்துள்ளனர்.
ஓரிரு நாட்கள் கழித்து அந்த குடும்பத்தில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளை காணவில்லையே என்று சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்தது உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த குழந்தைகள் மீட்கப்பட்டு திரும்பவும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்கள்.