ஆசியா கோப்பை: கடைசி ஓவர் வரை பயம் காட்டிய ஆப்கானிஸ்தான்; இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ள வங்கதேசம்



afganisthan-lost-final-chance

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 சுற்றின் நான்காவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி எதிராணியினரை கலங்கடித்த ஆப்கானிஸ்தான் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹொசைன் 6 ரன்களிலும் அடுத்து வந்த மிதுன் ஒரு ரன்னிலும் வெளியேற வங்கதேசம் அணி 6 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரஹிம், லிட்டன் தாஸ் உடன் இணைந்து சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் 19-வது ஓவரில் லிட்டன் தாஸ் மற்றும் சாகிப் அடுத்தடுத்து வெளியேறினார். அவர்களை தொடர்ந்து 33 ரன்களை எடுத்திருந்த ரஹீம் துரதிஷ்டவசமாக றன் அவுட்டாகி வெளியேறினார்.

bangladesh chance for final

இதனை தொடர்ந்து வங்கதேசம் மணி 21 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டும் எடுத்து தவித்தது. துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் மட்டும் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கையெஸ்  மற்றும் முகமதுல்லாஹ் ஆட்டத்தின் போக்கை திசை திருப்பினார். சிறப்பாக ஆடி வந்த இருவரும் அரை சதத்தை கடந்தனர். 

47-வது ஓவரில் முகமதுல்லாஹ் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த மோர்தசா  10 ரன்களில் வெளியேற வங்கதேசம் மணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்திருந்தது, சிறப்பாக ஆடிய கையெஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அப்தாப் அலாம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

bangladesh chance for final

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெனட் 5-வது ஓவரில் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த ரஹ்மத் ஒரு ரன்னில் றன் அவுட்டாகி வெளியேறினார். 

பின்னர் வந்த ஷஹிடி மற்றும் முகமது ஷாஷாத் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதத்தை கடந்தார். 25 ஆவது ஓவரில் 53 ரன்கள் எடுத்திருந்த ஷாஷாத் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த அஸ்கர் 39 ரன்களிலும் முகமது நபி 38 ரன்களும் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஷஹிடியும் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். 

bangladesh chance for final

49 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவர் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. ஆப்கானிஸ்தான் எப்படியும் இந்த ஆட்டத்தை வென்று விடும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். வங்கதேச அணியின் சார்பாக முஸ்தாபிஜூர் கடைசி ஓவரை வீச வந்தார். 

அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ரஷீத் கான் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 2 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை வங்கதேசம் அணி தக்க வைத்துள்ளது.