வரலாறு காணாத அளவு கிடு கிடுவென உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை!. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!.



petrol diesel price increased today


மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டேவருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருவதால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் பாதி மடங்கு அங்கேயே முடங்கியுள்ளது. 

இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலையும் கடந்த வருடங்களாகவே உயர்வு முகத்திலேயே உள்ளது.

petrol diesel

இன்றைய  டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்வை சந்தித்து வருகிறது. டீசல்  லிட்டருக்கு 73.69 ஆகவும். பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.81.22 ரூபாயாகவும் உள்ளது. 

தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டேபோவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. ஊதிய உயர்வு கூட வருடத்திற்கு ஒருமுறை தான் போடுகிறார்கள். ஆனால் இந்த பெட்ரோல் டீசல் விலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.