#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலர் தினத்தை முன்கூட்டியே அட்டகாசமான செல்பியுடன் வரவேற்ற விக்கி-நயன் ஜோடி!
சொந்த வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி இன்று திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியை பெற்று வருகின்றன.
நயன்தாராவுடன் சமீப காலமாக நெருக்கமாக இருந்து வருபவர் நானும் ரவுடிதான் பட்த்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பத்தினர். ஓய்வு நாட்களில் இருவரும் சேர்ந்து வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் காதலர் தினம் நெருங்கும் சமயத்தில் இருவரும் அமெரிக்காவில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து காதலர் தினத்தை முன்கூட்டியே வரவேற்கும் வண்ணம் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்பி ஒன்றை காதல் அடையாளத்துடன் நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
V N💞 #VikkiNayan 💝 pic.twitter.com/aLe8fHFvRj
— Nayanthara✨ (@NayantharaU) February 13, 2019