கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இன்ஸ்டாகிராம் பழக்கம்... கர்ப்பத்தில் முடிந்த காதல்... 16 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!!
தேனி மாவட்டத்தில் 16 வயது மாணவி கர்ப்பம் அடைந்தது தொடர்பான வழக்கில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திய வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் காதல்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் இத்ரீஸ். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக பழகி இருக்கிறார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. 16 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறிய இத்ரீஸ் அந்த மாணவியை பலமுறை பலாத்காரம் செய்திருக்கிறார்.
கர்ப்பமான மாணவி
இந்நிலையில் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது இத்ரீஸ் என்ற இளைஞர் தன்னை பலாத்காரம் செய்ததாக தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 10 ரூபாய் ஜூஸ் குடித்து படுத்த படுக்கையாக சிறுவன்; கடலூரில் பேரதிர்ச்சி.. அலட்சியத்தில் அதிகாரிகள்?.! தாய் குமுறல்.!
போக்சோ சட்டத்தில் கைது
இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் குறித்த இளைஞர் மீது தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இளைஞரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. 16 வயது சிறுமி கர்ப்பம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... மாணவருக்கு பாலியல் தொல்லை.!! போக்சோ சட்டத்தில் 2 ஆசிரியர்கள் கைது.!!