கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நெல்லையில் பயங்கரம்... மாணவருக்கு பாலியல் தொல்லை.!! போக்சோ சட்டத்தில் 2 ஆசிரியர்கள் கைது.!!
சமீப காலமாகவே இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் முதல் பணியிடங்கள் வரை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையே காணப்படுகிறது. இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த பள்ளி மாணவருக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
நெல்லை மாநகரின் பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு அந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் 2 நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலியல் தொல்லை
இந்தப் பள்ளியில் பயின்று வரும் ஏழாம் வகுப்பு மாணவரை நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியர் ராபர்ட் மற்றும் விஎம் சத்திரத்தைச் சேர்ந்த நெல்சன் ஆகியோர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவனின் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத வாகனம் மோதி சோகம்; இளைஞர் பரிதாப பலி.!
போக்சோ சட்டத்தில் கைது
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை நடத்திய விசாரணையில் ஆசிரியர்கள் ராபர்ட் மற்றும் நெல்சன் ஆகியோர் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள் ராபர்ட் மற்றும் நெல்சன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்; பணியின்போதே நடந்த துயரத்தால் மரணம்.!