கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கன்னியாகுமரியில் சோகம்... 17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு... எமனாக வந்த காதல்.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நட்பிற்காக 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிருக்கு உயிரான நட்பு
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் 17 வயது மகள் அபிநயா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்தார். அபிநயாவிற்கும் அவருடன் படித்த சிறுமி ஒருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்திருக்கிறது. இவர்கள் இருவரும் உயிருக்கு உயிரான நட்பில் இருந்து வந்துள்ளனர். தனது தோழியின் மேல் உள்ள பாசத்தால் அவரது பெயரை கைகளில் பச்சை குத்தி இருக்கிறார் அபிநயா.
நட்பில் விரிசல்
இந்நிலையில் அபிநயாவின் தோழி இளைஞர் ஒருவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இதன் காரணமாக அபிநயா உடன் பேசுவதையும் பழகுவதையும் அவர் குறைத்துள்ளார். இது அபிநயாவிற்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காதலால் தனது தோழி தன்னை விட்டு விலகுவதை அபிநயா விரும்பவில்லை. இதன் காரணமாக அபிநயா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்... பெண் ஜிம் பயிற்சியாளர் படுகொலை... காதலன் வெறி செயல்.!!
தற்கொலை செய்து கொண்ட அபிநயா
இந்நிலையில் அபிநயா தனது மற்றொரு தோழியுடன் மாத்தூர் தொட்டி பாலம் சென்று இருக்கிறார். அங்கிருந்து தனது உயிருக்கு உயிரான தோழிக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அப்போது அபிநயா மற்றும் அவரது தோழி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த அபிநயா பாலத்தில் இருந்து 70 அடி பள்ளத்தில் குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: திமுக பிரமுகர் அடித்துக் கொலை?.. இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட சடலம்.. குடும்பத்தினர் சோகம்.!