#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரே நாளில் சரிந்த சர்க்காரின் சாதனை! வேதனையில் ரசிகர்கள்!
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் நாளை வெளியாகிறது சர்க்கார் திரைப்படம். படம் முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் சர்க்கார் படத்தினை கொண்டாடும் விதமாக கொல்லம் நண்பன்ஸ்’ என்ற விஜய் வெறியர்களால் கேரளாவில் 175 அடி உயர கட் அவுட் ஓன்று நிறுவப்பட்டது. சமூக வலைத்தளங்களில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட இந்த விஷயம் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது. அதாவது ‘சர்கார்’ ரிலீஸாவதற்கு முன்பே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது அந்த 175 அட் உயர கட் அவுட்.
இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்ட கொல்லம் நன்பண்ஸ் குரூப் ‘வீண் வதந்திகளை நம்பவேண்டாம். பலத்த காற்றும் மழையும் வர வாய்ப்பிருப்பதை உத்தேசித்துதான் கட் அவுட்டை இறக்கியிருக்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.
கொல்லம் நகருக்கே வெளியே ஒரு மைதானத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அந்த 175 அடி உயர கட் அவுட் தான் இதுவரை இந்திய சினிமாவில் வைக்கப்பட்ட கட் அவுட்களிலேயே மிக உயரமானது என்று சொல்லப்பட்டது. இதைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் கூட வர ஆரம்பித்துவிட்டார்கள் என்று கொல்லம் நண்பன்ஸ் குரூப் உற்சாகம் அடைந்துகொண்டிருந்தபோது, கட்- அவுட் விஜயின் சில உடல்பாகங்கள் காற்றுக்குத் தலைவணங்கி தரையை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தன.
நிலமையின் விபரீதம் உணர்ந்த கொல்லம் நண்பன்ஸ் குரூப்பினர் இன்று காலை தாங்களே முன்வந்து கட் அவுட்டை கழட்டிவைக்க ஆரம்பித்துள்ளனர். பட ரிலீஸன்று மீண்டும் இந்த கட் அவுட் நிறுவப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.