#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியானது அனல்பறக்கும் 2.0 படத்தின் டிரைலர்; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த படங்களில் அதிக முதலீடு செய்து எடுக்கப்பட்ட படம் தான் 2.0. இந்த படத்தின் முதல் பாகம் தான் கடந்த 2010-ம் வருடம் ரஜினி - சங்கர் கூட்டணியில் உருவாகிய எந்திரன் படம். இந்த படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்று மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் எந்திரன் 2.0. இந்த படம் எந்திரனின் 2 ம் பாகமாகவே கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லன் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமாரும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை நவம்பர் 29ம் தேதி திரையில் வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீசெர் சில நாட்களுக்கு முன்பு மூன்று மொழிகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி யில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரப்பேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசரை சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த டீசரை ஹிந்தியில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பல ரசிகர்களின் மத்தியில் பிரமாண்ட திரையில் வெளியான இந்த 2.0 படத்தின் டிரைலரை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.