கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திண்டுக்கல் அருகே அதிர்ச்சி... பட்டப் பகலில் கொடூர கொலை.!! மர்ம நபர்கள் தலைமறைவு.!!
திண்டுக்கல் அருகே பிரபல ரவுடி மர்ம நபர்களால் தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரபல ரவுடி
திண்டுக்கல் மாவட்டம் காப்பிளியப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் தீனதயாள் வர்மா(32). இவருக்கு திருமணமாகி நாகஜோதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் அந்தப் பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இவர் மீது கொலை மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தலை சிதைத்து படுகொலை
இந்நிலையில் நேற்று மதியம் மா.மு. கோவிலூர் அருகே உள்ள அம்மா குளக்கரையில் சென்று கொண்டிருந்த தீனதயாள் வர்மாவை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். இந்தக் கொடூர சம்பவத்தின் போது அவரது தலை சிதைந்தது. இதனைத் தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர்.
இதையும் படிங்க: ஆடு மேய்க்க சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... அண்ணன், தம்பி அதிரடி கைது.!!
காவல்துறை விசாரணை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பான முதல் கட்ட விசாரணையில் பழிக்கு பலியாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரசாதம் கொடுத்து குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை... 70 வயது பூசாரி போக்சோவில் கைது.!!