"அம்மா, அப்பா மன்னிச்சிருங்க, நான் நல்ல மகள் இல்லை" - கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை.!



in Uttar Pradesh Amity University Campus Hostel Girl Dies by Suicide 

 

20 வயது கல்லூரி மாணவி, தான் தங்கியிருந்த விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷிதா உபாத்யாய் (வயது 20). இவர் தற்போது லக்னோவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: ரூ.5000 வரதட்சணைக்காக புதுமணப்பெண் அடித்தே கொலை; குடிகார மாப்பிள்ளை கொடூர செயல்.!

இதனிடையே, நேற்று காலை அவரின் அறை தோழி, முதல்நாள் இரவில் வேறொரு நண்பரின் அறையில் உறங்கி இருக்கிறார். காலை சுமார் 8 மணியளவில் தனது அறைக்கு சென்று அக்ஷிதாவை எழுப்பியபோது, அவர் நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை.

இதனால் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அக்ஷிதா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மின்விசிறியில் அவர் சடலமாக தொங்கி இருக்கிறார். 

Uttar pradesh

காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். அறையில் நடந்த சோதனையில், அக்ஷிதா தனது பெற்றோருக்கு, "அம்மா, அப்பா நான் உங்களுக்கு நல்ல மகள் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள்" என எழுதி இருக்கிறார்.

இறுதியாக பெண் தற்கொலைக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு தொடர்புகொண்டு பேசிய நிலையில், அவர் யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். 

இதையும் படிங்க: மனைவியின் பலாத்கார விடியோவை நேரலையில் பார்த்து ரசித்த கொடூர கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!